Editorial / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன், எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.எம்.அஹமட் அனாம், க.விஜயரெத்தினம், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குத் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், இம்மாதம் 13ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதிவரையும் 157 பேர் டெங்குத் தொற்றுத் தாக்கத்துக்குள்ளாகியுள்ளனர் எனவும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின், டெங்குக் கட்டுப்பாடுப் பிரிவுக்குப் பொறுப்பான வைத்தியக் கலாநிதி வே.குணராஜசேகரம் தெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதியில் இருந்து இதுவரை 2,036 பேர், டெங்குத் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று, வீடு சென்றுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட்டு, வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள், நீர்த்தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி, டெங்கு நுளம்புகள் பெருவதற்கு இடம்கொடுக்காத வகையில், துப்புரவாக வைத்துக் கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago