Editorial / 2020 ஜூன் 04 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலுள்ள பல பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில், தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடத் தாம் திட்டமிட்டிருப்பதாக, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயற்குழுக் கூட்டம், மட்டக்களப்பில் நேற்று (03) நடைபெற்றது. அதில் ஆராயப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துரைக்கையில், “இம்முறை தேர்தலில், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, தையல் மெசின் சின்னத்திலே மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் போட்டியிடுகின்றது. வடக்கு, கிழக்கிலே, யாழ். மாவட்டம் தவிர்ந்த ஏனைய இடங்களில் நாங்கள் இறங்கியிருக்கின்றோம்.
“அம்பாறை மாவட்டத்திலே நான் போட்டியிடுகின்றேன். அங்கு நான் வெற்றிபெறுவது உறுதி. அம்பாறை மாவட்ட மக்கள் என்னுடன் கைகோர்த்துள்ளார்கள்.
“மட்டக்களப்பு மாவட்டத்திலே மேச்சல் தரைப் பிரச்சினை, களுதாவளை மக்கள் பாரியளவில் விவசாயப் பொருள்களை உற்பத்தி செய்தாலும், அதை சந்தைப்படுத்த முடியாத நிலையில் பாதிக்கப்பட்டுகின்றனர். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், யுவதிகள், முன்னாள் போராளிகளும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.
“இவ்வாறான பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை பெற்றுக் கொடுக்க நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கின்றோம்” என்றார்.
இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தியை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியான தமது கட்சியிலிருந்து விலக்கி நீண்ட காலமாவதாகவும் எனினும் அவர் தமது கட்சியில்தான் போட்டியிடுவதாக மக்கள் மத்தியிலே பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
39 minute ago
42 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
42 minute ago
50 minute ago
2 hours ago