Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 08 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான், ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ், எம்.எஸ்.எம்.நூர்தீன், க.விஜயரெத்தினம்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியாக வைத்தியக் கலாநிதி ஏ.இளங்கோவன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியாகவும் பணியாற்றி வரும் நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கும் இணைப்புச் செய்யப்பட்டுள்ளார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அமைந்த இந்த நியமனத்தின் பொருட்டு, வைத்தியர் இளங்கோவன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளதாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய நிபுணர் இல்லாத நிலையில், சட்ட வைத்திய உடற் கூறாய்வுப் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பில் இருந்து சடலங்களை, திருகோணமலை, பொலன்னறுவை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்ப வேண்டிய நிலையிருந்து வந்தது.
இந்நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நிரந்தரமானதாக சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவேண்டியதன் அவசியத்தை மாவட்ட மக்கள் வலியுறுத்துகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
35 minute ago
46 minute ago