Janu / 2025 நவம்பர் 16 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் சனிக்கிழமை (15) அன்று விபத்துச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
மட்டு, கல்முனை வீதி வழியாக குருநாகல் இருந்து மருதமுனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சிறிய ரக லொறி ஒன்று செட்டிபாளையம் பிரதான வீதியால் பயணிக்கும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீடொன்றின் மதிலை உடைத்துக்கொண்டு வளவுக்குள் புகுந்துள்ளது.
மருதமுனை வெதுப்பகம் ஒன்றிற்கு சொந்தமான குறித்த லொறியில் விபத்தின் போது மருதமுனையை சேர்ந்த இருவர் பயணித்துள்ளதுடன் இருவரும் தெய்வாதீனமாக எந்த வித பாதிப்புமின்றி உயிர் தப்பியுள்ளனர். விபத்தில் வீட்டு மதில், வீட்டின் சில உடமைகள் மற்றும் லொறியின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளது
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றதுடன் குறித்த பிரதேசத்தில் மழையுடனான வானிலை நிலவி வரும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


30 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago