2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மரண வீட்டில் மோதல்: ஒருவர் படுகாயம்; ஓட்டோக்கும் தீ வைப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 22 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, கல்லடிப் பகுதியில், மரண வீடொன்றில் நேற்றிரவு (21) ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் படுகாயமடைந்துள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்ததுடன், ஓட்டோவொன்றுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம், கல்லடியிலுள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு அருகிலேயே இடம்பெற்றுள்ளது.

குறித்த மரண வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குழுவொன்றுக்கும் அங்கிருந்த ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது, ஒருவர் மீது பத்துக்கும் மேற்பட்டவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து குறித்த நபரின் ஓட்டோவையும் இழுத்துச்சென்று வீதியில் போட்டுத் தீயீட்டுக் கொளுத்தியுள்ளனர்.

இதன்போது, தாக்குதலுக்குள்ளானவர் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, அப்பகுதிக்குச் சென்ற மட்டக்களப்பு குற்றத்தடவியல் பிரிவுப் பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினர், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X