2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மருமகனின் தாக்குதலில் தாய்மாமன் பலி

Editorial   / 2021 டிசெம்பர் 21 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி மஜ்மா நகர் பகுதியிலே கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலத்தை, இன்று (21) காலை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

காணிப் பிரச்சினை காரணமாக மூன்று பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய தாயின் சகோதரனை (மாமாவை) மருமகன் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

இக் கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X