Princiya Dixci / 2021 மே 13 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம்
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி - மாவடிவேம்பு பிரதான வீதியில் நேற்றிரவு 09 மணியளவில் வான் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடி பகுதியில் இருந்து ஏறாவூர் நோக்கிப் பயணித்த வானே விபத்துள்ளானதாகவும் இதில் வான் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
வான் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோர மின் கம்பத்தில் மோதியுள்ளது.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே, இந்த விபத்துக்கு பிரதான காரணமென ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து அறியமுடிகின்றதெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் வானில் பயணித்த இருவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026