Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 ஜூலை 29 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூர், மாவடி வீதியில் சுமார் 3 அடி நீளமான சிறிய முதலையொன்று, மின்கம்பத்தில் கட்டப்பட்டிருந்த நிலையில் நேற்றுக் காலை உயிருடன் மீட்கப்பட்டது.
அப்பகுதியில் முதலையொன்று அநாதரவாகக் கட்டப்பட்டுக் கிடப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து ஸ்தலத்துக்குச் சென்று அதனை மீட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட முதலை, மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டது.
வரட்சி காரணமாக தற்சமயம் பிரதேசத்தில் உள்ள குளங்கள் வற்றி வருவதால் முதலைகள் வெளியேறியிருக்கலாம் என்று சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .