2025 மே 15, வியாழக்கிழமை

மு.காவின் அபிவிருத்திகளை முறியடிப்பதற்கு ‘மக்களைக் குழப்புகின்றனர்’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஜூலை 18 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக, பிளாஸ்டிக் வாளிகளையும் மண்வெட்டிகளையும் கொடுத்து, மக்களைக் குழப்புவதற்கு, "வங்குரோத்து நிலை அடைந்துள்ள சில அரசியல்வாதிகள்" முயற்சி செய்து வருகின்றனர் என, சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய பிரதியமைச்சர் பைஸல் காஸீம் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு இன்று (18) கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “அமைச்சர்களிடம் கோள் சொல்லி, மக்களுக்குக் கிடைக்கவிருக்கும் அபிவிருத்திகளைத் தடுப்பதற்கு, இந்த அரசியல்வாதிகள் சதி செய்கின்றனர்.

“முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சியையும் அது மக்களுக்கு செய்து வரும் அபிவிருத்தியையும், சில முஸ்லிம் அரசியல்வாதிகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இவர்கள், ஏதாவது செய்து, மக்களின் மனங்களை மாற்றுவதற்கு முயற்சி செய்கிறார்கள்" என்று அவர் குறிப்பிட்டார்.

மக்களின் தேவை என்னவென்று உணர்ந்து, தாம் செயற்பட்டுக்கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், ஆனால் வேறு சில அரசியல்வாதிகள், பிளாஸ்டிக் வாளிளைகளையும் மண்வெட்டிகளையும் கொடுத்துவிட்டு, பாரிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதாகக் காட்டிக் கொள்கின்றனர் என அவர் விமர்சித்தார்.

“முஸ்லிம் காங்கிரஸ் பெற்றிருக்கும் அமைச்சுகளின் ஊடாகச் செய்துவருகின்ற அபிவிருத்திப் பணிகளில் ஒன்றையாவது, இவர்கள் கிழக்கில் செய்திருக்கிறார்களா? இல்லை. ஆகவே, இவர்கள் தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டும்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .