2025 மே 03, சனிக்கிழமை

முருங்கை மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

A.K.M. Ramzy   / 2021 ஏப்ரல் 18 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

முருங்கை மரத்தின் மருத்துவ மதிப்பு மற்றும் பொருளாதார பெறுமதியை மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில் முருங்கை மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு  கல்லடி கமநல அபிவிருத்தி திணைக்கள கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி இ.சிறிபிரதீப் தெரிவித்தார்.

விகாரைகள் மற்றும் மதஸ்தலங்களுக்கு முருங்கை மரக்கன்று களை விநியோகிக்கும் பணிகள் இன்று நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டன.

முருங்கை மரத்தின் மருத்துவ மதிப்பு மற்றும் பொருளாதார பெறுமதியை மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில் ‘வாழ்க்கைக்கான தோட்டம்’ என்னும் தேசிய வேலைத்திட்டத்துக்கு அமைவாக புதுவருடத்தில் தலையில் எண்ணை பூசும் சுபநேரத்துக்கு இணைவாக இந்த முருங்கை மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டன.

 கல்லடி கமநல சேவைகள் நிலையத்தில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி இ.சிறிபிரதீப் தலைமையில் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X