Princiya Dixci / 2021 ஜூன் 20 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
திருடிச் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளான நிலையில், அதனைக் கைவிட்டுவிட்டு செலுத்திச் சென்ற நபர் தலைமறைவாகியுள்ள சம்பவமொன்று, நேற்று இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் சென்ற நபரொருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
விபத்துக்குள்ளான நபரை, பொலிஸாரின் உதவியுடன் சேருநுவர வைத்தியசாலையில் பிரதேச மக்கள் அனுமதித்துள்ளனர்.
எனினும், காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் இருந்து தலைமறைவாகியுள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட சேருநுவர பொலிஸார், தலைமறைவாகிய நபர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு கொண்டு செல்லப்பட்டது என்றும் அது கடந்த 14ஆம் திகதி வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காணாமல் போன பல்சர் மோட்டார் சைக்கிள் எனவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .