Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 23 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்,வா.கிருஸ்ணா,-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் புனரமைத்தல் மற்றும் சுயதொழில் மேம்படுத்தலுக்கான கடன்கள் வழங்குவதற்கான பயனாளிகளைத் தெரிவுசெய்யும் நேர்முகப் பரீட்சை இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது,புனர்வாழ்வு அதிகாரசபையினால் வீடுகளுக்காக 55 பேரினதும் சுயதொழிலுக்காக 74 பேரினதும் ஆவணங்கள் பரீட்சிக்கப்பட்டன.
வீடுகள் புனரமைப்பு, சுயதொழில், முச்சக்கரவண்டி கொள்வனவு மற்றும் சிறிய உழவு இயந்திரம் என்பன கொள்வனவு செய்வதற்காக தலா 250,000 ரூபாய் என்ற அடிப்படையில் 4 வீத வட்டியில் வழங்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு அதிகார சபையின் வேலைத்திட்டப் பணிப்பாளர் என். புகேந்திரன் தெரிவித்தார்.
இதில்,மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன், திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுங்சழியன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. தவராஜா மற்றும் மாவட்டச் செயலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago