2025 மே 07, புதன்கிழமை

வீட்டுத் தோட்டம் தொடர்பான பயிற்சி நெறி

Niroshini   / 2015 நவம்பர் 23 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு,மண்முனை தென் எருவில்பற்று பிரதேச பாலர் பாடசாலை ஆசிரியர்ளுக்கும் பெற்றோர்களுக்குமான வீட்டுத் தோட்டம் தொடர்பான பயிற்சி நெறி இன்று திங்கட்கிழமை ஓந்தாச்சிமடம் சமூக பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்றது.

சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் அனுசரணையில் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சி.அருந்ததியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பயிற்சி நெறியில், இப்பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 20 பாலர் பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்

இதன்போது, வீட்டுத் தோட்டம் அமைத்தல், சிறுவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துமிக்க பயிர்களை நடல், வீட்டுத் தோட்டத்தைப் பராமரித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டன.

இதில், களுவாஞ்சிகுடி பகுதிக்குப் பொறுப்பான விவசாயப் போதனாசிரியர் எஸ்.எழில்மதி கலந்துகொண்டு கருத்துக்களை வழங்கினார்.

இப்பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் காலாநிதி. எம்.கோபாலரெத்தினம், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகஸ்தர் கே.புவிதரன், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ரி.தயாளன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு வீட்டுத் தோட்டத்துக்குத் தேவையாக பயிர் விதைகளும் நாற்றுக்களும் பழமரக் கன்றுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X