Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Thipaan / 2017 மே 12 , மு.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கிழக்கு மாகாண முதலமைச்சரின் வீதிக்கு ஒளி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் முதற்கட்டமாக ஏறாவூரின் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் தெருவோர மின் விளக்குகளைப் பொருத்தும் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சரின் ஏறாவூர் செயலகம் தெரிவித்துள்ளது.
ஏறாவூர் நகரை அபிவிருத்தி காணச் செய்வதற்கு மக்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளும் வகையில் ஒவ்வொரு கிராமங்களையும் மையப்படுத்தி கிழக்கு முதலமைச்சர் நஸீர் அஹமட்டினால் அபிவிருத்திக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக, கலைமகள் பாடசாலை வீதி,தைக்கா குறுக்கு வீதி ஆலையடி வீதி, றிபாய் தைக்கா வீதி, சர்வோதய வீதி, காளி கோயில் வீதி, லக்கி வீதி மற்றும் காந்தி வீதி ஆகிய பகுதிகளில் 120 மின்கம்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றுக்கு மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன,
இது தொடர்பான பணிகளை நேரடியாக அவதானிக்க, குறித்த பகுதிகளுக்கு முதலமைச்சர், நேற்று (12) சென்றிருந்தார்.
அத்தோடு அப்பகுதிகளிலுள்ள மக்களின் குறைகளையும் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டார்,
சில பிரச்சினைகளுக்கு தொலை பேசி மூலம் உடனடியாக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தீர்வுகளையும் பெற்றுக் கொடுத்தார். இதனை பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக் கொண்ட மக்கள் பாராட்டினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
25 May 2025