2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி; மூவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2017 மே 01 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கர், எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை (30) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன், மூவர்  படுகாயமடைந்துள்ள நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அவ்வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய காத்தான்குடியைச் சேர்ந்த 17 வயதுடைய மூவரும் மற்றும் 18 வயதுடைய ஒருவருமே விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

நண்பர்களான இந்த நான்கு இளைஞர்களும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வேகமாகப் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவ்விரண்டு மோட்டார் சைக்கிள்களும் மோதி விபத்துக்குள்ளானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X