2026 மார்ச் 26, வியாழக்கிழமை

வடமுனைக் காட்டில் ஆணின் சடலம் கண்டெடுப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 28 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வடமுனைக் காட்டிலிருந்து கல்குடாவைச் சேர்ந்தவரும் வடமுனையில் வசிப்பவருமான வைரமுத்து நவரெத்தினம் (வயது 61) என்பவர், இன்று (28) சடலமாக மீட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமையன்று (26)  வீட்டை விட்டு காட்டுப் பகுதிக்குச் சென்றவர் திரும்பி வராத நிலையில், காட்டுப் பகுதியில் சடலமொன்று கிடப்பதாக பொலிஸாருக்கு இன்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சம்பவம் பற்றி வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .