Janu / 2026 ஜனவரி 05 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, புனானை வனவிலங்கு காரியாலயத்தை உடைத்து அங்கிருந்த சொட்கன் துப்பாக்கியொன்று மற்றும் ஜல்லர் இயந்திரம் உட்பட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ள சம்பவம் சனிக்கிழமை (03) அன்று இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை - கொழும்பு வீதியின் புனாணை பகுதியில் அமைந்துள்ள வனவிலங்கு பாதுகாப்பு காரியாலயத்தில் கடமையாற்றி வருபவர்கள் வழமைபோல வெள்ளிக்கிழமை (02) மாலை கடமைகளை முடிந்ததும் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று அடுத்த நாள் (சனிக்கிழமை - 02) காலை காரியாலயத்திற்கு வந்தபோது அங்கு காரியாலயத்தின் கதவு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த காரியாலயத்தின் கதவு உடைக்கப்பட்டு காரியாலயத்துக்கு உள் நுழைந்து அங்கிருந்த சொட்கன் துப்பாக்கி ஒன்று அதற்கான 3 தோட்டாக்கள், துளை கருவியான ரில்லர் ஒன்று, எரிவாயு அவன் ஒன்று ஆகிய பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கனகராசா சரவணன்

29 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago