ரீ.எல்.ஜவ்பர்கான் / 2020 ஜனவரி 09 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத முறையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட 720 வர்த்தக நிலையங்கள், கடந்த வருடம் சுற்றிவளைக்கப்பட்டு, 48 வர்த்தகர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்ததாக, அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி ஏ.எல்.நௌசாத் தெரிவித்தார்.
குறித்த வர்த்தகர்கள், நீதி மன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டபோது 1 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நிறுத்தல் அளத்தல் கருவிகளுக்கு முத்திரையிடாமை, நிறை குறைந்த பாண் விற்பனை உட்பட பல்வேறு மோசடியான வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் மீதே இவ்வாறு சட்ட நடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, குறித்த அதிகாரி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரம், காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, களுவாஞ்சிக்குடி, வாழைச்சேனை, கொக்கட்டிச்சோலை உள்ளிட்ட 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இச்சுற்றிவளைப்புகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago