Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Freelancer / 2022 நவம்பர் 28 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி, ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையான வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா, இன்று (28) இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் திருமதி தவத்திருமகள் உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்தகுமார், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் விசேட அதியாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் வல்லிபுரம் கனகசிங்கம் கலந்து கொண்டார்.
2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மாகாண, மாவட்ட மட்டங்களில் சாதனை படைத்த மாணவர்களும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சிறப்பாக திறமைகளை வெளிக்காட்டிய மாணவிகள் மற்றும் கல்வி பொது தராதர சாதாரண தரம், உயர்தரம் சித்தியடைந்த மாணவர்கள் இதன்போது அதிதிகளால் பதக்கங்கள் அணிவித்து, சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வுக்கு பாடசாலையின் உப அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவிகள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டதோடு, மாணவிகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago