Princiya Dixci / 2021 செப்டெம்பர் 29 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி, கிரான்குளத்தில் மோட்டார் சைக்கிளும் காரும் நேற்று (28) மாலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞன் உயிரிழந்துள்ளார் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
களுதாவளை, கடற்கரை வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய ரவீந்திரன் பிரசாத் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
காரை செலுத்தி சென்ற நபரை கைது செய்துள்ள காத்தான்குடி பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
23 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago
1 hours ago