Princiya Dixci / 2021 ஜூன் 22 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக நேற்றிரவு (21) பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர்.
இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, மக்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன்போது இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் உருவப் படங்களை தீயிட்டு எரித்து, பிரதேச மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதையடுத்து அப்பகுதியின் பாதுகாப்பு தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .