Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 31 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காவத்தமுனை முகைதீன் அப்துல் காதர் எழுச்சிக் கிராம மக்களுக்கு வீட்டுத் தோட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்றுப்புதன்கிழமை ஓட்டமாவடி பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.அஸ்பக் தலைமையில் எழுச்சிக் கிராமத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், விவசாய திணைக்களத்தின் ஓட்டமாவடி விவசாயப் போதனாசிரியர் எம்.டி.எம்.ஜமால்டீன் வளவாளராக கலந்து கொண்டார்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் ஐம்பது வீடுகளைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட முகைதீன் அப்துல் காதர் எழுச்சிக் கிராமத்தில் உள்ள பயனாளிகளிகளுக்கு வீட்டுத் தோட்டங்களின் முக்கியத்துவம், வீட்டுத் தோட்டங்களில் ஏற்படும் நன்மைகள், தோட்டங்கள் அமைக்கும் முறைகள் பற்றி விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அமைக்கப்படும் வீட்டுத் திட்டத்தில் சிறந்த முறையில் வீட்டுத் தோட்டங்களை அமைக்கும் பயனாளிகளுக்கு அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் பரிசுத் தொகைகள் வழங்கி வைக்கப்படும் இதேவேளை', வீட்டுத் திட்ட பயனாளிகள், நஞ்சற்ற உணவு உற்பத்தி செய்து தங்கள் பாவனைக்கும், வியாபாரத்திற்கும் பயன்படுத்த வேண்டுமெனவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago