வா.கிருஸ்ணா / 2017 மே 23 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவில் 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்துக்குப் பின்னர், தனி நபர்களுக்கு மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை என அப்பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், நேற்றுத் தெரிவித்தார்.
இங்கு 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்துக்குப் பின்னர் மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதை தாம் நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், மணல் அகழ்வுக்காக ஏற்கெனவே வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துக் கொடுப்பதாகக் கூறினார்.
மேலும், மணல் அகழ்வுக்கு வழங்கப்பட்ட அளவை விட, அதிகளவான மணல் இப்பிரதேசத்திலிருந்து கொண்டு செல்லப்படுகின்றது. இதனால், இப்பிரதேசத்திலுள்ள மண் வளமும் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வழங்கப்பட்ட அளவை விட, அதிகளவான மணலைக் கொண்டு செல்பவர்கள் தொடர்பில் பொலிஸாரும் கவனத்தில் கொள்வதில்லை.
சட்ட ஒழுங்கு சரியாகக் கடைப்பிடிக்கப்பட்டால், இங்கு மணல் அகழ்வைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் கூறினார்.
11 minute ago
23 minute ago
33 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
23 minute ago
33 minute ago
5 hours ago