2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

போடைஸ் - மன்றாசி வீதி புனரமைப்பு; 13 கோடி ரூபா நிதியொதுக்கீடு

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 24 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

ஹட்டன், டிக்கோயா, போடைஸ் சந்தியிலிருந்து மன்றாசி வழியாக டயகமவிற்கு செல்லும் பிரதான பாதையை சுமார் 13 கோடி ரூபா நிதியொதுக்கீட்டில் தற்போது புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தப் புனரமைப்புப் பணிகள் இடம்பெறுவதால் இந்தப்பாதையின் வாகனப் போக்குவரத்துக்கள் எதிர்வரும் 31ஆம் திகதி தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளன.

கடந்த பல வருடங்களாக போடைஸ் - மன்றாசி பாதை குன்றும் குழியுமாக காணப்பட்டதால் இந்தப்பாதையின் ஊடாக பயணிக்கின்ற வாகன சாரதிகளும் பிரதேச மக்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தனர்.

இவ்விடயம் குறித்து இ.தொ.கா.வின் பொதுச்செயலாளரும் கால்நடை சமூக கிராமிய அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸிசில்ராஜபக்ஸவின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதன் பயனாக இந்தப்பாதையைப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக செப்பனிடும் பணிகள் கடந்ம 15 ஆம் திகதி முதல் இடம் பெற்றுவருகின்றன. இந்தச் செப்பனிடும் பணிகளை பொருளாதார பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் உட்பட அதிதிகள் அண்மையில் ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

நீண்டகாலமாக செப்பனிடப்படாமலிருந்த போடைஸ் - மன்றாசி வரையிலான பாதை குன்றும் குழியுமாக காணப்பட்டதால் இந்தப்பாதையின் ஊடான அரசாங்க பயணிகள் போக்குவரத்துக்கள் இடைநிறுத்தப்பட்டதால் பாடசாலை மாணவர்களும் ஏனையவர்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கினர்.

இவ்வாறானதொரு நிலையில் இந்தப்பாதை தற்போது கார்ப்பட் பாதையாக செப்பனிடப்படுவதால் போடைஸ், புதுக்காடு, பிரஸ்டன், எல்பியன் போன்ற தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் நன்மையடைய உள்ளனர்.

அத்துடன் இந்தப்பாதையின் நிர்மானப்பணிகள் பூர்த்தியடையும் விடத்து மன்றாசியிலிருந்து ஹட்டன் நகருக்கு 45 நிமிடத்தில் பயணத்தினை மேற்கொள்ள கூடியதாகவிருக்குமென வாகன சாரதிகள் கூறுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .