2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மத்திய மாகாணத்தில் 12 இடங்களில் மண்சரிவு அபாயம்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 24 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மத்திய மாகாணத்துக்கு பெய்துவரும் கடும் மழை காரணமான கண்டி மாவட்டத்தை சேர்ந்த 12 பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் நிலவும் சாத்தியக்கூறு இருப்பதாக இலங்கை கட்டிட ஆராய்ச்சி நிலையம் கூறுகின்றது.

இலங்கை கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் கண்டி காரியாலய உயர் அதிகாரி எம்.அய்.டீ.எச். விஜேவிக்கிரம கருத்து தெரிவிக்கையில், 'ஹன்தான, தென்னேகும்புர, தல்வத்த, பஹிரவகந்த, டெங்கியாவத்த,   புவெலிகட, ஹீரெஸ்ஸகல, ஹன்தெஸ்ஸ, வெலம்பொட,  அம்பிட்டிய, வௌதென்ன மற்றும் வெல்தம்பல ஆகிய 12 மலைப் பிரதேசங்களிலும் மண்சரிவு அபாயம் நிலவுவதாக' கூறினார்.

இம்மலையடிவாரங்களில் வாழும் மக்களை அவ்விடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுருத்திவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .