2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நுவரெலியாவில் சிறு அபிவிருத்தி திட்டங்களுக்கு ரூ.12 இலட்சம் ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 20 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமாரின் வேண்டுகோளுக்கமைய, மத்திய மாகாண முதலமைச்சரின் நிதியொதுக்கீட்டிலிருந்து நுவரெலியா மாவட்டத்தின் சிறு அபிவிருத்தித் திட்டத்திற்காக 12 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு இந்த அபிவிருத்தித்திட்டங்கள் தற்போது பூர்த்தியாகும் நிலையிலுள்ளன.

பொகவந்தலாவை மேற்பிரிவு தோட்ட பாதையைச் செப்பனிடுவதற்காக 2 இலட்சம் ரூபாவும் றம்பொடை புரட்டொப் தோட்ட நீர் விநியோகத்திற்காக 2 இலட்சம் ரூபாவும்  கொட்டகலை ஸ்டோனிக்கிளிப் கீழ்ப்பிரிவு தோட்டத்திற்கான நீர் விநியோகத்திற்காக 2 இலட்சம் ரூபாவும் தலவாக்கலை கிரேட்வெஸ்டன் கல்கந்தை தோட்டத்தின் நீர் விநியோகத்திற்காக 2 இலட்சம் ரூபாவும் டயகம ஈஸ்ட் தோட்ட பாதையைச் செப்பனிடுவதற்காக 2 இலட்சம் ரூபாவும்  கந்தப்பளை தோட்ட பாதையைச் செப்பனிடுவதற்காக 2 இலட்சம் ரூபாவும்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக  தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X