2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கிருமிநாசினியைச் சுவாசித்ததால் 19 மாணவர்கள் வைத்தியசாலையில்

Super User   / 2010 நவம்பர் 23 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ, எஸ்.தியாகு)

நுவரெலியா ஹைபொரஸட் இலக்கம் மூன்று தமிழ் வித்தியாலயத்தை சேர்ந்த 19  மாணவர்கள் ஒருவகையான கிருமிநாசினியை  சுவாசித்ததினால் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பாடசாலையின் அருகிலுள்ள மரக்கறி தோட்டமொன்றில் இன்று முற்பகல் 11 மணியளவில் பயிர்களுக்குக் கிருமிநாசினி விசிறப்பட்ட காற்றுடன் கலந்து பாடசாலை சூழலி பரவியதால் மூன்றாம் தவணைப் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த தரம் 10 மற்றும் தரம் 11 வகுப்பு மாணவர்கள் சிலர் சுவாசித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு குமட்டலும் வயிற்றுவலியும் ஏற்பட்டதால் உடனடியாக ஹைபொரஸட் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர்.

மேலதிக சிகிச்சைகளுக்காக இந்த 19 மாணவர்களும்  நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .