2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மடக்கும்பரையில் தீ: 20 வீடுகள் எரிந்து நாசம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 04 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ராஜேஸ்வரன், க.கிஷாந்தன், எஸ்.தியாகு

தலவாக்கலை - மடக்கும்புர - டொப்லோவர் தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் 20 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன.

அந்த தோட்டத்தில் 7 ஆம் இலக்க லயன் குடியிருப்பிலேயே இன்று வெள்ளிக்கிழமை பகல் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயினால் லயன் வீடுகளில் இருந்த பெரும்பாலான பொருட்கள் சேதமடைந்துள்ளன.

மின்சார ஒழுக்கின் காரணமாகவே இந்த வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. இதில் 58 பெண்கள், 32 ஆண்கள் என 90 பேர் மொத்தமாக இந்த பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு கொத்மலை பிரதேச அபிவிருத்தி குழவின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கொத்மலை பிரதேச செயலாளர் மேனக ஹேரத்திற்கு பணித்துள்ளார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் தற்பொழுது கலாபுவனம் தமிழ்வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டள்ளனர்.இவர்களுக்கான வசதிகளை  தோட்ட நிர்வாகம் மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .