2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வீதித்தடுப்பு விழுந்ததில் 4 வயது சிறுவன் பலி

Kanagaraj   / 2013 நவம்பர் 27 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


இரும்பிலான வீதித்தடுப்பு தலையில் விழுந்ததில் நான்கு வயது சிறுவனொருவன் பலியான சம்பவமொன்று மஸ்கெலியா, நல்லத்தண்ணி கீழ்பிரிவு தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

தனது சகோதரியுடன் விளையாடிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பொலிஸ் சோதனை சாவடியை அமைப்பதற்காக பயன்படுத்த இரும்பிலான வீதி தடுப்பே அச்சிறுவனின் தலையில் விழுந்துள்ளது.

சம்பவத்தில் முள்ளுகாமம் முன்பள்ளியில் கல்விப்பயிலும் நான்கு வயதான முத்துக்குமார் தயானந்தன் என்ற சிறுவனே பலியாகியுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவனை பெற்றோர் மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் அது பலனலிக்கவில்லை.

சிவனொலிபாதமலைக்கான யாத்திரை ஆரம்பமாகவிருப்பதால் பொலிஸ்  வீதித்தடைகளை போடுவதற்காக இந்த வீதித்தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.





  Comments - 0

  • VALLARASU.COM Thursday, 28 November 2013 08:15 AM

    இதை பொலிஸார் உரிய முறையில் அப்புறப்படுத்தி வைத்திருந்தால் இந்த அனர்த்தம் ஏற்பட வாய்ப்பில்லை...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .