Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜனவரி 10 , மு.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கடந்த சில தினங்களாக கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும்; மழையால் ஏற்பட்டுள்ள மண்சரிவுகள் காரணமாக 50 வீடுகள் முற்றாகவும் 50க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
கண்டி அனிவத்த பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவால் ஐந்து வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. அம்பிட்டிய பிரதேசத்தில் ஐந்து வீடுகளும் போகம்பரை பிரதேசத்தில் இரண்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன. லேவெல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவால் ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் கம்பளை, கெலிஒயா, ஹேவாஹெட்ட, அக்குறணை, கலகெதர, உடுநுவர ஆகிய பிரதேசங்கள் உட்பட பல பிரதேசங்களில் ஏற்பட்ட மண்சரிவால் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மண்சரிவுப் பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார தெரிவிக்கையில், நேற்றுமுன்தினம் பெய்த கடும் மழையால் கண்டி மாவட்டம் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகவும் சுமார் 100 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
பேராதெனிய கன்னொறுவ வீதி, அனிவத்த, லேவெல்ல, தொடம்வெல, போகம்பர ஆகிய மலை பிரதேசங்களில் வாழும் மக்களையே இவ்வாற பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago