2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கற்பாறை விழுந்து 7 பேர் பலி

Super User   / 2011 ஜனவரி 09 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி அனிவத்த பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தொகுதியில் கற்பாறை ஒன்று விழுந்ததன் காரணமாக ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் பலத்த காயங்களுககுள்ளாகி கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கற்பாறை விழுந்ததால் காயமடைந்த 10 பேரையும் இரு சடலங்களையும் இன்று மாலையே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இடிபாட்டுக்குள் சிக்கியுள்ள மற்றவர்களை கண்டெடுக்கும் பணியில் இராணுவத்தினரும் பொலிஸாரும்; ஈடுபட்டுள்ளனர்.

கற்பாறைக்குள் சிக்குண்டுள்ள மற்றையவர்களை மீட்பதற்காக இரானுவத்தினர் வெடி மருந்துகளை பயன்படுத்தி கற்பாறையை வெடிவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X