2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

22ஆம் திகதி காயமடைந்தவர் 20 நாட்களுக்கு பின் மரணம்

Kogilavani   / 2016 ஜனவரி 12 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா         

பதியத்தலாவை, பல்லேகமவில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த, சாரதியான 45 வயதுடைய என்.டி.நீல் என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று (11) உயிரிழந்தார்.

கெப்பட்டிப்பொல இலங்கை போக்குவரத்து சபை டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸும் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சுற்றுலா பயணிகள் பயணித்த பஸ்ஸின் சாரதி கடுங்காயங்களுக்குள்ளான நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .