Kogilavani / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்
நல்லத்தண்ணி மற்றும் தலவாக்கலை பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் மூவர் காயமடைந்துள்ளதுடன் ஒரு பகுதிக்கான மின்விநியோகமும் தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டனிலிருந்து நல்லத்தண்ணி நோக்கி, பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று இன்று காலை(19) நல்லத்தண்ணி ரிக்காடன் பகுதியில் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் அப்பகுதிக்கான மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திரக்கோளாரே இவ்விபத்துக்கு காரணமென பொலிஸார் கூறினார்.
விபத்தில், பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் மின்கம்பம் உடைந்ததால் ரிக்காடன் பகுதிக்கான மின் விநியோகம் தடைபட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினார்.
மின்தடையை சீர்செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதேவேளை, நுவரெலியா- தலவாக்கலை பிரதான பாதையில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் மூவர் காயங்களுக்குள்ளாகி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
ரதல்ல கிளேன்டன் பகுதியில் இவ்விபத்து நேற்று(18) மாலை இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டியின் சாரதி அதிக வேகத்தில் வண்டியை செலுத்தியதால் முச்சக்கர வண்டியானது வேகக்கட்டுப்பாட்டை இழந்து, பாதையோரத்தில் மணல் ஏற்றிக்கொண்டிருந்த மூவர் மீது மோதியுள்ளது. இவ்விபத்தில் காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டியின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


45 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
4 hours ago
5 hours ago