Kogilavani / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ
இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் 800 இலட்சம் ரூபாய் செலவில் 200 பஸ் தரிப்பு நிலையங்களை அமைப்பதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் முதற்கட்டமாக பலாங்கொடை நகருக்குள் அமைக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பு நிலையங்கள் செவ்வாய்க்கிழமை (29) திறந்து வைக்கப்பட்டன.
இதேவேளை, பலாங்கொடை வைத்தியசாலையில் 78 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகளுக்கான வார்ட்டு தொகுதியும் திறந்து வைக்கப்பட்டது.
இவ்விரு நிகழ்வுகளிலும் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், மாகாண கல்வி அமைச்சர் பானு முனிப்பிரிய, மாகாண சபை உறுப்பினர் அகில எல்லாவல, மாகாண பிரதான செயலாளர் எச்.பி.குலரத்ண, மாகாண பிரதான அமைச்சின் செயலாளர் பி.எம்.பி.என்.பெலிகமன உட்பட பலர் கலந்துகொண்டனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago