2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

இளைஞன் சடலமாக மீட்பு

Niroshini   / 2017 மே 02 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்

 திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்மலை நீர்தேகத்துக்கு நீர் வழங்கும் சவுத் மடக்கும்புர ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

 இச்சம்பவம் நேற்று பகல் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

திம்புள்ள மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த தியாகராஜ் வினோதன் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 தனது 3 நண்பர்களுடன் ஆற்றில் நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் குறித்த இளைஞன் சுழியொன்றில் அகப்பட்டுள்ளார்.

 அகப்பட்ட குறித்த இளைஞனை ஏனைய நண்பர்கள் காப்பாற்ற முயற்சித்த போதும் முயற்சி பயனளிக்காத நிலையில் மேற்படி இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

 இதனையடுத்து, இன்று காலை 10.30 மணியளவில் நுவரெலியா மாவட்ட பொலிஸ் பாதுகாப்பு பிரிவினரும் திம்புள்ள பத்தனை பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து குறித்த இளைஞனின் சடலத்தை ஆற்றிலிருந்து மீட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .