Kogilavani / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.ஆ.கோகிலவாணி
கூட்டொப்பந்தம் காலாவதியாகி ஒன்றறை வருடங்கள் கடந்துவிட்டன. இதனால், பெருந்தோட்ட மக்கள் பொருளாதார ரீதியில் பின்னடைவை எதிர்கொண்டுள்ளனர். இதற்கு தீர்வாக முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்துள்ள தீர்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. தோட்டத் தொழிலாளர்களை பாதிக்கும் எந்த முடிவுகளுக்கும் துணைபோக முடியாது' என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். 'கூட்டொப்பந்;த விடயத்தில் தன்னிச்சையாக கையொப்பமிடமாட்டேன். மக்களின் ஆணையை பெற்றப்பின்பே கையொப்பமிடுவேன். இரகசிய பேச்சுக்கே இடமில்லை. கூட்டொப்பந்த விடயத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவரவேண்டிய கடப்பாடு, ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கங்களுக்கு உண்டு. நல்லாட்சி அரசாங்கமும் இதனையே வலியுறுத்துகிறது' என அவர் மேலும் கூறினார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,
'பெருந்தோட்டத் தொழிற்றுரையையும் தோட்டத் தொழிலாளர்களையும் பாதிக்கின்ற எந்த முடிவுகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
கூட்டொப்பந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் தொழிற்சங்கங்கள், பிரதமர் தலைமையிலான உயர் மட்டத்தில் பேச்சுக்களை நடத்தியுள்ளன. இதனை வரவேற்கின்றேன். ஆனால், தொழிலாளர்களை பாதிக்கின்ற எந்த விடயத்துக்கும் துணை போக முடியாது.
எதிர்காலத்தில் பெருந்தோட்டத் துறைiயும் தொழிலாளர்களையும் பாதிக்காத வகையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அதேபோன்று, கடந்த மார்ச் மாதம் முதல் கொடுக்கப்பட வேண்டிய நிலுவைப் பணம் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.
தொழிலாளர்களின் நலன் கருதி, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இடைக்கால கொடுப்பனவாக 2,500 ரூபாய் பெற்றுக்கொடுக்கப்பட்டது. அரச தோட்டங்கள் சிலவற்றில் இக்கொடுப்பனவு வழங்கப்படவில்லை என கூறியதற்கமைவாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியதுடன் எழுத்துமூலமான அறிக்கையும் பெறப்பட்டுவிட்டது. எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்பதாக, அரச தோட்டங்களிலுள்ள தொழிலாளர்களுக்கு, 2,500 ரூபாயை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, 'இடைக்கால கொடுப்பனவான 2,500 ரூபாயை, இரண்டு மாதங்களுக்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டுமென்பதற்காக திரைசேரியிலிருந்து 22 கம்பனிகளுக்கும் பணம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, 2,500 ரூபாய் கொடுப்பனவை பெற்றுகொள்ளாத தொழிலாளர்கள், அது தொடர்பில் எனது கவனத்துக்கு கொண்டு வந்தால் நடவடிக்கைகளை எடுக்க முடியும்' என்றார்.
'இந்த இடைக்காலக் கொடுப்பனவும் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அதற்கு முன்பதாக, கூட்டொப்பந்த பேச்சுவார்த்தையின் மூலம், தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம்' என்றார்.
6 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
13 Apr 2026