Kogilavani / 2017 மே 01 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
'நாங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற வகையில் அரசாங்கத்துடன் இணைந்திருந்தாலும், எமது தனித்துவத்தை பாதுகாப்பதில் அக்கறையுடையவர்களாகவே இருக்கின்றோம். தமிழ் முற்போக்கு கூட்டணி, ஒருபோதும் தனித்துவத்தை இழக்காது. நாங்கள் மூவரும் பல விட்டுக்கொடுப்புகளுடனும் அர்ப்பணிப்புடனும் இந்த அமைப்பை கட்டிக்காத்து வருகின்றோம். அதற்கு, கூட்டணியின் அனைத்து அங்கத்தவர்களும் எமக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றார்கள்' என்று, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின கூட்டம், நேற்று தலவாக்கலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் கூறிய அவர்,
'கூட்டணியை பலப்படுத்தி, எதிர்வருகின்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் நாம் எமது தனித்துவத்தை எடுத்துக்காட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றோம். மலையகத்திலுள்ள அனைத்து அமைப்புகளும் எங்களுடன் கைகோர்க்க முடியுமானால், எமது மக்களுக்கு இன்னும் பல வெற்றிகளை பெற்றுக் கொடுக்க முடியும்.
கூட்டணியை பலப்படுத்த வேண்டிய பொறுப்பு மக்களுடையதே. இதுவரை நாம் பெற்றுக்கொண்ட அனைத்து வெற்றிகளையும் நாம் எமது மக்களுக்கே சமர்ப்பிக்கின்றோம். இது முழுமையாக தொழிலாளர்களுக்கு கிடைத்த வெற்றியாகவே நாம் பார்க்கின்றோம். இந்த தலவாக்கலை நகரை உலகறியச் செய்தவர் அமரர் பெரியசாமி சந்திரசேகரன் என்றால் அது மிகையாகாது.
இலங்கைக்கு எதிர்வரும் 12 ஆம் திகதி விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமரிடம், நாம் இன்னும் அதிகமான வீடுகளை மலையகத்தில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க உள்ளோம். மலையக வரலாற்றில் இந்திய பிரதமரின் வருகை ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.
இந்திய அரசாங்கம் எமக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகின்றது. அடுத்த மே தினம் நாம் இன்னும் பல வெற்றிகளை பெற்றுக் கொண்ட ஒரு மேதினமாக இருக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது' என்று அவர் மேலும் கூறினார்.
4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026