Sudharshini / 2016 ஜனவரி 05 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
இலங்கையின் இரண்டாவது பிரதான நகரமாக கருதப்படும் கண்டி நகரை, 1228.4 கோடி ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கண்டி மாட்ட செயலகம் அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், கண்டி மாவட்ட பிரதிநிதிகள் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய கண்டி நகரின் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது. இதற்காக கண்டி - கட்டுகஸ்தோட்டை வீதி 361 கோடி ரூபாய் செலவிலும் கண்டி - பேராதனை வில்லியம் கோப்பல்லாவ வீதி 185 கோடி ரூபாய் செலவிலும் கண்டி புகையிரத நிலையத்துக்கு அருகில் இருந்து மணிக்கூட்டு கோபுரம் வரையிலான வீதி 24 கோடி ரூபாய் செலவிலும் புனரமைக்கப்படவுள்ளன.
இதேவேளை, கண்டி நகருக்கு பிரவேசிக்காமல் செல்வதற்கான இரு மாற்று வீதிகளை அம்பிட்டிய மற்றும் தலாத்துஒயா ஆகிய நகரங்களினூடாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், கட்டுகஸ்தோட்டை, பேராதனை மற்றும் தென்னங்கும்புர ஆகிய பிரதேசங்களில் மூன்று பஸ் தரிப்பிடங்களும் நிர்மாணிக்கப்பட உள்ளதாக கண்டி மாட்ட செயலகம் அறிவித்துள்ளது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago