Kogilavani / 2016 ஜனவரி 08 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
நோர்வூட், டிலரி தோட்டத்தில் தேயிலை தூளை திருடியதாக கூறப்படும் ஐவரை நோர்வூட் பொலிஸார் நேற்று இரவு கைதுசெய்துள்ளதுடன் 60 கிலோகிராம் தேயிலை தூளையும் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகலை தொடர்ந்து, நோர்வூட் புளியாவத்தை பகுதியில் முச்சக்கரவண்டியை மறித்து சோதனையிட்ட பொலிஸார் அதிலிருந்து 60 கிலோகிராம் தேயிலை தூளை மீட்டதுடன் சந்தேகத்தின் பேரில் நால்வரை கைதுசெய்துள்ளனர்.
தொழிற்சாலை உத்தியோகத்தர்கள் இருவர், தொழிற்சாலை காவலாளி ஆகியோர் இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தொழிலாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்திலும் தொழிற்சாலைக்கு முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டதுடன் தொழிற்சாலையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களை இடமாற்றம் செய்யுமாறு தோட்ட நிர்வாகத்திடம் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.
மேற்படி உத்தியோகத்தர்களை இடமாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago