2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

'கடைகளை அடைக்கவேண்டாம்: கறுப்புக்கொடியை கட்ட வேண்டாம்'

Kogilavani   / 2016 ஜூன் 29 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி வர்த்தகர்  சங்கங்களின் ஒன்றிணைந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கடையடைப்பு மற்றும் கறுப்புக்கொடி ஏந்தும் போராட்டம், தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதென மேற்படி அமைப்பு அறிவித்துள்ளது.

கடந்த வாரம், கண்டி தமிழ் வர்த்தகர் சங்கம், கண்டி முஸ்லிம் வர்;த்தகர் சங்கம், கண்டி சிங்கள வர்;த்தகர்; முன்னணி உட்பட பல வர்த்தக அமைப்புக்கள் ஒன்றிணைந்து, பெறுமதி சேர்;க்கப்பட்ட வற் வரிக்கு எதிராக, இம்மாதம் 27ஆம் திகதி முதல், கண்டியில் எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், உயர்க்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுடன் மேற்கொள்ளப்பட்ட சந்திப்பை அடுத்து, மேற்படி போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இதேவேளை, எதிர்வரும் தினமொன்றில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொள்வதற்கான  ஒழுங்குகளை செய்து தருவதாக அமைச்சர் தெரிவித்ததை அடுத்து, அப்பேச்சுக்களின்போது சாதகமான முடிவொன்று கிடைக்கலாம் என்பதால், தமது போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, கண்டியில் நடக்கவிருந்த கறுப்புக் கொடிப் போராட்டம் மற்றும் கடையடைப்பு என்பன நடைபெறமாட்டாது என்று தெரிவித்த அவ்வமைப்பினர், கட்டுகஸ்தோட்டை நகரில், திட்டமிட்டபடி இன்றைய எதிர்ப்பு நடவடிக்கை நடைபெறும் என்றும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .