Niroshini / 2017 மே 13 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்
“மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு, தமிழ் முற்போக்குக் கூட்டணி என்பன இணைந்து நோர்வூட் மைதானத்தில் நடத்திய மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முக்கியஸ்தரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்த தமிழ் முற்போக்குக் கூட்டணினைச் சேர்ந்த அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் ஆகியோர் மிகுந்த கட்டுக்கோப்புடன் நோர்வூட் மைதானத்தில் இடம்பெற்றக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பாரத பிரதமர் நரேந்திரமோடி, எமது நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வியக்கும் வகையில் நோர்வூட் மைதானத்தில் சகல ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்திய அமைச்சர்களான மனோகணேசன், பழனி திகாம்பரம், வி.இராதாகிருஷ்ணன் ஆகியோர் மலையகத் தமிழ் மக்களைப் பெருமைப்படுத்தியுள்ளனர்.
நாட்டின் பல பாகங்களிலிருந்து எமது ஏற்பாட்டில் 600 பஸ்களில் வருகை தந்த சுமார் 30000 மக்களுக்குத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் சில சதிகள் இடம்பெற்றபோதும், இவற்றைப் புரிந்து கொண்ட எமது இளைஞர்கள், கட்டுக்கோப்புடன் செயற்பட்டமையைப் பாராட்டாமலிருக்க முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் சிறப்பாக செயற்பட்டு வருவதற்குக் கிடைத்த பரிசாக இந்திய பிரதமர் எமக்குத் தருவதாக உறுதியளித்துள்ள 10 ஆயிரம் வீடுகளைக் கருதுகின்றோம்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026