Niroshini / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்று ஒரு கட்சி மட்டுமே நாட்டில் இருப்பதாகவும் அது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இயங்கும் கட்சியென்றும் போக்குவரத்துத் துறை அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்;திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவருமாக நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
கண்டி அஸ்கிரிய பீடத்தின் புதிய மஹாநாயக்கத் தேரரை, ஞாயிற்றுக்கிழமை (17) மாலை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்;சியின் அங்கத்தவர்களுள் 99 சதவீதமானோர் தன்னுடன் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறிய கருத்துத் தொடர்பாக ஊடகவியலாளர்கள், அமைச்சரிடம் வினவிய போது,
'ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பது ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் தலைமையில் இயங்கும் கட்சி மாத்திரமே. அக்கட்சி அங்கத்தவர்கள் மத்தியில் பல கருத்துக்கள் நிலவலாம். யாரும் எதையும் நினைத்துக் கொள்ளலாம். அது முக்கியமானதல்ல. மக்களின் நினைப்பே இங்கு முக்கியம்' என்றார்.
மேலும், பதுளை மக்கள் 99 சதவீதமானோர் தன்னுடன் இருப்பதான தானும் நினைத்துக் கொண்டுள்ளதாகக் கூறிய அமைச்சர் அது சரியானதாக இருப்பதற்கு மக்களும் அவ்வாறு நினைக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
45 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
4 hours ago
5 hours ago