2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

‘திரிபீடக கொள்கை பின்பற்றப்பட வேண்டும்’

Kogilavani   / 2017 மே 15 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

உயிர்களிடத்தே அன்பை செலுத்த வேண்டுமென, பௌத்த தர்மத்திலுள்ள திரிபீடக கொள்கை வழிகாட்டுகிறது. இன்றைய உலகில் நடைபெறும் மனிதப் படுகொலைகளுக்கு, இது ஒருத் தீர்வை முன்வைக்கின்றது. அதனைப் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புத்தசாசன அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.   

14ஆவது சர்வதேச வெசாக் தின கொண்டாட்டத்தின் நிறைவு விழா, கண்டி, தலதாமாளிகை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இவ்வைபவத்தில், பத்து பிரகடனங்கள் அடங்கிய கண்டித் தீர்மானங்கள்  வெளியிடப்பட்டன.   

இந்நிகழ்வில் கலந்துகொண்ட புத்தசாசன அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, இந்தப் பத்து பிரகடனங்களையும் வெளியிட்டு வைத்து உரையாற்றும்போதே, இவ்வாறு கூறினார். மேலும் கூறிய அவர்,   

“மஹிந்த தேரரின் விஜயத்துடன் தேவநம்பிய திஸ்ஸ அரசன், பௌத்த தர்மத்தை ஏற்று வழிபட்டதன் விளைவாகவே, இலங்கையில் பௌத்தம் பரவியது. நாம் பௌத்தத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களே தவிர, உரிமையாளர்கள் அல்லர்.

எனவே, இன்றைய பௌத்த தர்மத்தின் மூலம் சர்வதேச நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும். இலங்கையானது, பௌத்த தர்மத்தின் பிரதான சின்னத்தைப் பாதுகாக்கும் ஒரு நாடாகும்” என்றார்.   

இந்நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேபாள நாட்டு ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி, சபாநாயகர் கருஜயசூரிய, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்ட பலர் அதிதிகளாக கலந்துகொண்டனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .