Niroshini / 2016 ஜனவரி 12 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை ஆசிரியர் சேவையில் மறுசீரமைக்கப்பட்ட ஆசிரியர் சேவை பிரமாணத்தில் இணைத்துக் கொள்ளப்படுவது தொடர்பான விண்ணப்பப்படிவங்கள், மத்திய மாகாணத்திலுள்ள சில கல்வி வலயங்களிலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்குச் சிங்கள மொழியில் மாத்திரம் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் அதிருப்தி தெரிவித்தார்.
மத்திய மாகாண தமிழ் மொழி மூல ஆசிரியர்களுக்குச் சிங்கள மொழியில் விண்ணப்பப்படிவங்கள் அனுப்பப்பட்டுள்ளதால் தமிழ் மொழிமூல ஆசிரியர்கள் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக ஆசிரியர்கள்,மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரனின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் மத்திய மாகாண கல்விப்பணிப்பாளரின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.
இதன்போது, நுவரெலியா மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு இலங்கை ஆசிரியர் சேவையில் மறுசீரமைக்கப்பட்ட ஆசிரியர் சேவை பிரமாணத்தில் இணைத்துக் கொள்ளப்படுவது தொடர்பான விண்ணப்பப்படிவங்கள் தமிழ் மொழியில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மத்திய மாகாணத்திலுள்ள ஏனைய தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்குத் தமிழ் மொழி மூல விண்ணப்பப்படிவங்களை அனுப்புவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் மத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளர் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரனிடம் உறுதி வழங்கியுள்ளார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
9 hours ago