Kogilavani / 2016 ஜூன் 20 , மு.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

'இன்று சிலர், பின்வழியில் அரசாங்கத்துக்குள் புகுவதற்கும் வரப்பிரசாதங்களை அனுபவிப்பதற்கும் வெட்கம் கெட்டு செயற்படுகின்றனர். இவர்கள் குறித்து மக்கள் தெளிவடைய வேண்டும். அமைச்சர் திகாம்பரம் உட்பட தமிழ் முற்போக்குக் கூட்டணி அமைச்சர்களும் முக்கியஸ்தர்களும் மக்களின் மனமறிந்து செயற்படுகின்றனர்' என தொழிலாளர் தேசிய சங்கத்தின் அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
'1000 ரூபாய் சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு திராணி அற்றவர்கள் இன்று, தோட்டம் தோறுந்தோறும் சென்று தொழிலாளர்களுக்குப் பொய்யுரையாற்றி தாம் இழந்து செல்லும் அங்கத்துவப்பலத்தை தக்கவைத்துக் கொள்ளும் நாடகமொனறை அரங்கேற்றியுள்ளனர்' என்றும் அவர் கூறினார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் நாவலப்பிட்டி பணிமனையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். தொ.தே.சங்கத்தின் உதவிச்செயலாளர் வீரப்பன், மாவட்ட பிரதிநிதி கமல், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் காளிதாஸ் உட்பட தோட்ட தலைவர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'மலையகத்தில் இன்று அரசியல் ரீதியில் மறுமலர்ச்சி காலம் பிறந்துள்ளது. இதனை உணர்ந்து தொழிலாளர்களும் ஏனையவர்களும் தொடர்ந்து எமக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
'மலையகத்தின் ஏமாற்று தலைமைகளுக்கு அண்மைய தேர்தல்களில் மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர். மலையகத்தில் பந்தா அரசியலுக்கும் ஏமாற்று அரசியலுக்கும் வாரிசு அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் முற்போக்குக் கூட்டணியுடன் இணைந்து தலையிடுவதை விரும்பாத சிலர், இன்றைய அரசாங்கம் குறித்துத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பிழையான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
இவரகளின் கபட நாடகத்தினால் எதனையும் சாதித்துக்கொள்ள முடியாது. தோட்டத் தொழிலாளர்களின் தீபாவளி முற்பணம் பெற்றுக் கொடுப்பதில் நாம் அரசின் தலையீட்டைப் பெற்றதுபோல கூட்டொப்பந்தம் கைச்சாத்திடும் வரையான 2,500 ரூபாய் கொடுப்பனவு தொடர்பிலும் அரசாங்கத்தின் அழுத்தத்தை கம்பனிகள் மீது ஏற்படுத்தியுள்ளோம்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 2,500 ரூபாய் கொடுப்பனவு கிடைத்து விடக்கூடாதென்ற எண்ணத்துடன் செயற்படுகின்ற தொழிற்சங்கவாதிகளின், தொழிற்சங்க பலத்தை வலுவிழக்கச் செய்து அவர்களுக்குத் தகுந்த பாடத்தைப் புகட்டுவதற்கு தொழிலாளர்கள் ஒன்றுதிரண்டு செயற்பட வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு அடி நிலத்தைக் கூட வழங்க முன்வராத தோட்ட நிர்வாகங்கள் இன்று தொழிலாளர்கள் வீடுகளைக் கட்டிக்கொள்வதற்காக ஏழு பேர்ச்சஸ் நிலத்தை மனமுவந்து அளந்து கொடுக்கின்ற நிலைமையை மலையகத்தில் ஏற்படுத்தியுள்ளோம். லயத்து வாழ்க்கை முறையை ஒழித்து கிராம வாழ்க்கை முறைக்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
எமக்கு வாக்களித்த மக்களுக்காக நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றோம். இதனை உணர்ந்து எமது சமூகத்தை ஏமாற்றுப் பேர்வழிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி மேலும் உத்வேகத்துடன் செயற்படும்' என்றார்.



2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago