Kogilavani / 2017 மே 02 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டங்களில் நடைபெறுகின்ற ஆலய திருவிழாக்களில், எமது பாரம்பரிய கலாசார பண்பாடுகளை பாதிக்கும் வகையிலான நிகழ்வுகள் அரங்கேறுவது கவலையளிப்பதாக, மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளர் க.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட எமது மூதாதையர்கள், வறுமையிலும்கூட தமது பண்பாட்டு அம்சங்களை கட்டிக்காக்கத் தவறவில்லை.
மாத்தளையில் ஆரம்பமான அவர்களது சோக வரலாறு, மலையகமெங்கும் வியாபித்தது. இருந்தும்கூட அவர்கள், தமக்கே உரித்தான தெம்மாங்கு பாடல்கள், கும்மி, கோலாட்டம், கரகம் பல்லாங்குழி, உறுமி, உடுக்கு, தப்பு, ஒப்பாரி, அம்மன் தாலாட்டு போன்ற கலை வடிவங்களுடன் இரண்டறக் கலந்திருந்தனர்.
இத்தகைய கலை ஆற்றுகைகளுக்கூடாக அவர்கள் தமது மனச்சுமையை போக்கிக்கொண்டனர்.
25 வருடங்களுக்கு முன்பு பெருந்தோட்டங்களில் நடைபெற்ற திருவிழாக்களில், பக்தர்களின் பக்தியை மட்டுமே காணமுடிந்தது. ஆனால் இன்று, மதுபாவனை, ஆட்டம், பாட்டம், அடிதடி என்பனவே பிரதானமாகக் காணப்படுகின்றது.
இளைஞர்களின் இத்தகைய போக்கினால், திருவிழா இடைநடுவே நின்றுவிடுமோ என்ற பயம் எப்போதும் இருந்துக்கொண்டே இருக்கின்றது.
இறைவன் பாரை ஆள்கிறான் என்ற நிலைமை மாறி, இளைஞர்கள் பார்களை வாழவைக்கின்றார்கள் என எண்ணத் தோன்றுகின்றது. எனவே, இந்நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும். நாம் எமது பாரம்பரியங்களை பேணி பாதுகாக்க வேண்டும் என்பதுடன், எதிர்காலத்தில் திருவிழாக்களை எவ்வித குழப்பங்களுமின்றி மனநிறைவுடன் நடத்துவதற்கான வழிகளை உரியவர்கள் ஏற்படுத்த வேண்டும்” என்று அவர் கோரியுள்ளார்.
4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026