Kogilavani / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச
மஹியங்கனை நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகள் தம்மைப் புகைப்படம் எடுப்பதால், தமது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் பாரிம்பரியமும் சீர்குலைவதாக, ஆதிவாசிகள் தலைவர் ஊருவரிகே வன்னியலே அத்தோ கோரியுள்ளார்.
அத்துடன், மஹியங்கனையை வெறும் சுற்றுலாத் தளமாகவும் பொழுதுபோக்கும் இடமாகவும் கருதாது, வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும் என்பதை நினைவில் நிறுத்துமாறும் அவர் கோரியுள்ளார்.
விடுமுறைக்கென வரும் சுற்றுலாப் பயணிகள், ஆதிவாசிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுப்பதற்காக மாத்திரமே வருகை
தருகின்றனரென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.ஊடகவியலாளர்களுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்தப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த வாரம், நீண்டதொரு விடுமுறையை முன்னிட்டு மஹியங்கனை நோக்கி சுமார் 3 இலட்சம் சுற்றுலாப்பயணிகள் வருகை தந்திருந்தனர். இவர்கள், ஆதிவாசிகளுடன் புகைப்படம் எடுத்தனர். அவ்வாறான செயற்பாடுகளினால், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகின்றது.
இதனைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் மூலம்;, ஆதிவாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன், எளிமையான வாழ்க்கை முறையைப் பாதிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் அவர், 'நீங்கள், உள்ள விடுமுறையைக் கழிப்பதற்கென பொழுதுபோக்கச் செல்லும் மற்ற இடங்களைப் போன்று மஹியங்கனையையும் நினைக்காது, இது வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம் என்பதை நினைவில் நிறுத்திச் செயற்படல் வேண்டும்' என்றார்.




4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago