2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

“மோடியை வரவேற்க அணித்திரளுங்கள்”

Kogilavani   / 2017 மே 01 , பி.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

“மலையகத்துக்கு விஜயம் மேற்கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் தயாராக வேண்டும்“ என்று, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்தார்.

கினிகத்தேனை நகரில் நேற்று நடைபெற்ற இ.தொ.காவின் மேதின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் கூறிய அவர்,

“காங்கிரஸுக்கு நிகர்  காங்கிரஸ் மட்டுமே. இன்று சிலர், இந்திய பிரதமர் மோடியின் மலையக விஜயத்தை வைத்து அரசியல் நடத்துகின்றனர்.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் வேண்டுகோளுக்கிணங்க, இந்திய அரசாங்கத்தின் நீதியுவியுடன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டடத்துக்கு, நானே அடிக்கல்லை நாட்டினேன். சிலர் தாமே, மோடியை இலங்கைக்கு அழைத்து வருவதாக பொய் பிரசாரம் செய்து வருகின்றார்கள். அது பொய். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றே, இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்திய பிரமதர் மோடியின் மலையக விஜயத்தில் கலந்துகொள்ளுமாறு, இந்திய அரசாங்கத்தினால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் அனைவரும் எதிர்வரும் 12ஆம் திகதி,  டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு வருகைத்தந்து, இந்திய பிரதமரை வரவேற்க வேண்டும்” என்றார்.

இ.தொ.காவின் மேதினக் கூட்டத்தில்  'அரச பெருந்தோட்டங்கள்   கைமாறுவதை தடுக்க வேண்டும்", 'அவர்களுக்கான கொடுப்பனவை வழங்க வேண்டும்', 'தோட்ட சேவையாளர்களுக்கு வீடமைப்பு தீட்டங்கள் வழங்க வேண்டும்', 'தொடந்து தொழிலாளர்களாக வாழ முடியது. எமது மக்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றப்பட வேண்டும்”  ஆகிய முக்கியக் கோரிக்கைகள் பிரகடனப்படுத்தப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .