Yuganthini / 2017 மே 11 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆ.ரமேஸ்
இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு மலையகத்தின் ஹட்டன் பிரதேசத்துக்கு நாளை (12) வரவிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால், மலையகம் மறுமலர்ச்சி அடையும் வகையில், பல வேண்டுகோள்கள் முன்வைக்கப்படவுள்ளன.
இந்த வேண்டுகோள்களை நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடாகவும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஊடாகவும் இந்தியப் பிரதமரின் கவனத்துக்கு கொண்டுவருவதற்கான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதென, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அம்பகமுவ பிரதேசத்தின் ஐ.தே.க பிரதம அமைப்பாளருமான கே.கே.பியதாஸ தெரிவித்தார்.
இது தொடர்பில், அவர் இன்று(11) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இந்தியப் பிரதமரின் ஹட்டன் விஜயமானது, முழு மலையத்திலும் வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். இவரது வருகையினால், மலையகம் அதனை சார்ந்த மக்கள் மறுமலர்ச்சி அடைய வேண்டும்.
“அந்தவகையில், மலையக மக்களின் வாழ்க்கை அபிவிருத்திற்கான கோரிக்கைகள் சிலவற்றை முன்வைக்கவுள்ளேன்.
“மலையக மாணவர்களின் உயர்க் கல்வியை மேம்படுத்துவதற்காக, பொறியியல், சட்டத்துறை மற்றும் வைத்தியத்துறைக்கான பயிற்சிக் கல்லூரிகளை மலையகத்தில் அமைத்தல், மலையகத்தின் இன்றைய கல்வி நிலைமையை மேலும் உயர்த்த, பாடசாலைகள், ஆசிரியர்களை உருவாக்குதல், மலையக தோட்டப் பகுதிகளில், வசதியற்ற பிரதேசங்களை இனங்கண்டு, இந்திய அரசின் உதவியுடன் வைத்தியசாலைகளை அமைத்தல், மலையக இந்திய வம்சாவளி மக்களின் 200 வருடகால லயன் வாழ்க்கை ஒழியும் வகையில், இந்திய அரசாங்கத்தினால் மேலதிக வீடுகள் வழங்கப்படுதல் போன்ற கோரிக்கைகள், இதில் அடங்குகின்றன.
இந்தக் கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை, டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலைத் திறப்புக்குப் பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஊடாக, இந்தியப் பிரதமரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது” என, பியதாஸ எம்.பி, மேலும் கூறியுள்ளார்.
4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026