2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

ரூ. 2,500 ஐ முறையாக வழங்கவும்

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜ்

தோட்டத் தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பணவாக வழங்கப்படுவதாக கூறப்பட்ட 2,500 ரூபாயை, முறையாக வழங்குவதற்கு தோட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இடைகால கொடுப்பணவாக 2,500 ரூபாய் வழங்கும் நடவடிக்கைகள் தற்போது தோட்ட நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், சில தோட்ட நிர்வாகங்கள் இக்கொடுப்பணவை  முறையாக வழங்கவில்லையென தொழிலாளர்கள்  கவலை தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா நானுஓயா உடரதல்லை தோட்டத்தில் இக்கொடுப்பணவு கடந்த 29 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், இத்தோட்டத் தொழிலாளர்கள் இக்கொடுப்பணவை பெறாமல் தோட்ட நிர்வாகத்தினரிடம் திருப்பி கொடுத்துள்ளதாக  தெரியவருகிறது.

மேற்படி தோட்ட நிர்வாகமானது, ஜூன் மாதம் தோட்ட   தொழிலாளர்களுக்கு விடுமுறை (லீவூ போனஸ்) வழங்கியுள்ளது. இதன் காரணமாக குறைந்த நாட்களே தொழிலாளர்கள் வேலை செய்துள்ளனர். வழமையாக செப்டெம்பர் மாதமே விடுமுறை வழங்கப்படுவதாகவும் ஆனால், தோட்ட நிர்வாகம் முன்கூட்டியே விடுமுறையை வழங்கிவிட்டதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றர்.

இதனால், இவர்கள் கடந்த ஜூன் மாதம் 5 அல்லது 10 நாட்கள் மாத்திரமே வேலை செய்துள்ளனர். இதனைக்  காரணம் காட்டி தோட்ட நிர்வாகம் இக்கொடுப்பணவை குறைத்து வழங்க முயற்சித்ததாகவும் இதன் காரணமாகவே இடைக்கால கொடுப்பணவை பெற்றுகொள்ளவில்லையெனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவ்விடயம் தொடர்பாக தொழிற்சங்க அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தப்போதிலும், அவர்கள் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையென  தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .